கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி வீடு திரும்பினார்


கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 19 Nov 2024 4:05 AM (Updated: 19 Nov 2024 4:30 AM)
t-max-icont-min-icon

கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி வீடு திரும்பினார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு சிறப்பு டாக்டர் பாலாஜி (வயது 53) கடந்த சில தினங்களுக்கு முன் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார். தன்னுடைய தாயாருக்கு சரியாகச் சிகிச்சை அளிக்கவில்லை என்று விக்னேஷ் என்ற வாலிபர் அந்த வெறித் தாக்குதலில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜிக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கிண்டி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் டாக்டர் பாலாஜியின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தனர். தொடர்ந்து டாக்டரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வந்தனர். இதையடுத்து டாக்டர் பாலாஜி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கத்திக்குத்தால் காயமடைந்த டாக்டர் பாலாஜி, கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளார். பாலாஜியை சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story