இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கும் இயக்கம் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கும் இயக்கம் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒவ்வொரு நாளும் வரலாற்று ஏடுகளில் இடம்பெறும் வகையில் அமைந்துள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிஞரும் பாமரரும் ஒருசேரப் போற்றும் நிதிநிலை அறிக்கை, மாநில சுயாட்சிக்கான குழு அமைப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெறச் சட்டம், தமிழ் வார விழா, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் என ஒவ்வொரு நாளும் வரலாற்று ஏடுகளில் இடம்பெறும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தையும் அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொண்டு காக்கும் இயக்கம் தி.மு.கழகமே என எதிரிகளின் மனசாட்சியும் அறியும்! ஏழாவது முறையும் கழக ஆட்சி அமையும். என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story