எஸ்.ஐ.ஆர். என்ற வார்த்தையை கேட்டாலே தி.மு.க. பயப்படுகிறது: எடப்பாடி பழனிசாமி பேட்டி


எஸ்.ஐ.ஆர். என்ற வார்த்தையை கேட்டாலே தி.மு.க. பயப்படுகிறது:  எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2025 3:20 PM IST (Updated: 30 Oct 2025 3:45 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்க்கட்சிதான் பயப்பட வேண்டும். ஆனால், தி.மு.க. ஏன் பயப்படுகிறது? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது. பசும்பொன்னில் இன்று (வியாழக்கிழமை) தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவரான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், மதுரை கப்பலூரில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவர், தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளன. அதனால், கோர்ட்டு மூலம் போலி வாக்காளர்களை நீக்கியுள்ளோம். இறந்தவர்களின் பெயர்களை கூட நீக்காமல உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்க்கட்சிதான் பயப்பட வேண்டும். ஆனால், தி.மு.க. ஏன் பயப்படுகிறது?

எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்) என்ற வார்த்தையை கேட்டாலே தி.மு.க. பயப்படுகிறது என கூறினார். பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி பேசும்போது, பீகாரை பற்றி எனக்கு தெரியாது. நான் தமிழகம் பற்றி பேசுகிறேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு பிறகு முறையான வாக்காளர் பட்டியல் வரும் என நினைக்கிறேன் என்றார்.

1 More update

Next Story