பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு: எல்.முருகன்


பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு: எல்.முருகன்
x
தினத்தந்தி 28 Jan 2025 7:57 AM IST (Updated: 28 Jan 2025 12:02 PM IST)
t-max-icont-min-icon

பட்டியலின மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்வதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.

திருச்சி,

திருச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் முதல்-அமைச்சர் மேலூர் மக்களை ஏமாற்றியுள்ளார். கடந்த தி.மு.க. அரசு தான் அந்த சுரங்கம் அமையும் பகுதியில் சர்வே செய்து கொடுத்துள்ளது. அதுதொடர்பான கடிதங்களில் தி.மு.க. அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் ஏலம் ரத்தாக முழு காரணம் தமிழக பா.ஜனதா கட்சி தான்.

சுரங்கம் அமைய உள்ள பகுதியில் கோவில்களும், புராதான சின்னங்களும் உள்ளன என்று அந்த பகுதி மக்கள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். அதனை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஏலத்தை ரத்து செய்ய காரணமாக இருந்தது தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தான்.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் விவகாரத்தையும், டங்ஸ்டன் விவகாரத்தையும் ஒப்பிடக்கூடாது. வேங்கைவயல் விவகாரத்தை திசை திருப்பி பட்டியல் இன மக்களுக்கு துரோகம் செய்யும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. அதனால்தான் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சி.பி.ஐ. விசாரித்தால் தான் வேங்கைவயல் மக்களுக்கு சரியான நீதியை கொடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story