22-ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு


22-ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு
x

திமுக தலைமை செயற்குழு கூட்டம் 22-ம் தேதி நடைபெறும் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை,

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாலும், 18-ம் தேதி தமிழகத்துக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாலும் அன்றைய தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாக இருந்த திமுக தலைமை செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட திமுக தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டட திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் (22.12.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது சுலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தினை தவறாது கொண்டு வர வேண்டும். கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story