தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்: 10-ந்தேதி நடக்கிறது


தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்: 10-ந்தேதி நடக்கிறது
x

கோப்புப்படம் 

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

சென்னை,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்து அந்த தேர்தலை எதிர்கொண்டது. தற்போது, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலேயே தே.மு.தி.க. நீடித்து வருகிறது. விரைவில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும், 2026 சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையிலும், கட்சியின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக தே.மு.தி.க. உயர்மட்ட குழுக்கள் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் வருகிற 10-ந்தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல், கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகள், கட்சியின் அடுத்த நகர்வுகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story