தீபாவளி பண்டிகை: மதுரை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு


தீபாவளி பண்டிகை:  மதுரை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2024 7:17 PM IST (Updated: 26 Oct 2024 7:54 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வண்டி எண்: 06076/06075 மதுரை - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். வரும் 29, 30 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும். மதுரைக்கு மறுநாள் அதிகாலை 1.20மணிக்கு சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து காலை 8.15 மணிக்கு கிளம்பும் ரெயில் தாம்பரத்திற்கு பிற்பகல் 3.25 மணிக்கு வந்து சேரும்.

சென்னை- கன்னியாகுமரி:

வண்டி எண்; 06079- சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. செண்ட்ரலில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் கன்னியாகுமரிக்கு மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து 28 ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


Next Story