திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து: ஓ. பன்னீர் செல்வம் வேதனை


திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து: ஓ. பன்னீர் செல்வம் வேதனை
x
தினத்தந்தி 14 Dec 2024 12:15 AM IST (Updated: 14 Dec 2024 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு சிறுவன் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாகவும், முப்பதுக்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வந்த செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

மேற்படி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். மூச்சுத் திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைந்து குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மேலும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.


Next Story