திண்டுக்கல்: பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த முதியவர் தடுமாறி விழுந்து உயிரிழப்பு - போலீஸ் விசாரணை


திண்டுக்கல்: பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த முதியவர் தடுமாறி விழுந்து உயிரிழப்பு - போலீஸ் விசாரணை
x

திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில், மூத்துராமின் மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியுள்ளது.

திண்டுக்கல்,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த முதியவர் முத்துராம். குடும்பத்தினர் யாரும் இல்லாமல் தனியாக வசித்து வந்த முத்துராம், வேடச்சந்தூரில் உள்ள ஒரு பூக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வேலை முடிந்த பிறகு இரவு நேரங்களில் வேடச்சந்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் தங்கி இருந்துள்ளார்.

இவருக்கு மது அருந்து பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மது அருந்திவிட்டு பயணிகள் நிழற்குடையின் கீழ் முத்துராம் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில், மூத்துராமின் மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதில் மயக்கமடைந்த முத்துராம், சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், முத்துராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடச்சந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் முதியவர் தடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவம் வேடச்சந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story