டி.ஐ.ஜி. வருண் குமார் தொடர்ந்த வழக்கு: சீமான் ஆஜராக உத்தரவு


டி.ஐ.ஜி. வருண் குமார் தொடர்ந்த வழக்கு: சீமான் ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 7 April 2025 7:48 AM (Updated: 7 April 2025 12:07 PM)
t-max-icont-min-icon

சீமான் ஆஜராகவில்லை என்றால் பிடிவாராண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

திருச்சி,

தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சமூக ஊடக தளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சி மாவட்ட குற்றவியல் நான்காவது நீதிமன்றத்தில் டி.ஐ.ஜி. வருண் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். எனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பான வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராக வேண்டும் என திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. சீமான் ஆஜராகவில்லை என்றால் பிடிவாராண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story