மருதமலை கோவில் கும்பாபிஷேகம்: 1-ந் தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி


மருதமலை கோவில் கும்பாபிஷேகம்: 1-ந் தேதி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
x

குடமுழுக்கின்போது மருதமலை முருகன் கோவிலில் தமிழில் வேள்விகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடவள்ளி,

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 1-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் கோவிலில் உள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் சக்தி கலசங்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

எனவே 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை யாகசாலையில் உள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 4-ந் தேதி கும்பாபிஷேக விழா முடிந்ததும் வழக்கமான முறையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 2 சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. அன்றைய தினத்தில் பக்தர்கள் படி வழியாகவும், கோவில் பஸ்கள் மூலமாகவும் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே கோவை மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கின்போது, யாக குண்டங்களில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலும் வேள்விகள் நடத்தப்படும் என சென்னை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவாதம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story