கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுர அலங்காரம்: அதிமுக கண்டனம்

மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா? என அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவும், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
"திமுக அரசு, இந்து மத மக்களின் உணர்வுகளை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாகவும், இந்துக்களை கொச்சைப்படுத்துவதில் அப்படி என்ன சந்தோசம் உங்களுக்கு?" என்றும் எக்ஸ் சமூக வலைதளம் மூலம் அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது.
"மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா?"மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்ட விவகாரம்"மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரத் தெரியாத திமுக அரசு" - அதிமுக கண்டனம்#KARUNANITHI #DMK #ADMK pic.twitter.com/IzTdL2nhhw
— Thanthi TV (@ThanthiTV) April 17, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





