அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு - டாக்டர் சஸ்பெண்ட்


அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு - டாக்டர் சஸ்பெண்ட்
x

பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது மூச்சு விட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது. பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு குழந்தையின் உடலுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிரசவம் பார்த்த மகப்பேறு டாக்டர் ரம்யாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பானுமதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story