அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் பா.ம.க. கொடியுடன் நடனம்... விளக்கம் அளிக்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவு


அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் பா.ம.க. கொடியுடன் நடனம்... விளக்கம் அளிக்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவு
x

அரசுப் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பா.ம.க. கொடி பயன்படுத்திய விவகாரத்தில் விளக்கம் அளிக்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த சோமனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் சிலர் பா.ம.க. கொடியுடன் நடனமாடினர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அரசுப் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பா.ம.க. கொடி பயன்படுத்திய விவகாரத்தில், ஏழு நாள்களுக்குள் விளக்கம் அளிக்க தமிழாசிரியர் சுப்பிரமணி, தலைமை ஆசிரியர் விஜய்குமார் ஆகியோருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் உத்தரவிட்டுள்ளார்.

விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story