கடலூர்: தீ விபத்தில் 49 செம்மறி ஆடுகள் கருகி பலி

ஆட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 49 செம்மறி ஆடுகளும் தீயில் கருகி செத்துக் கிடந்தன.
திட்டக்குடி,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வாகையூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தனது வயலில் செம்மறி ஆடுகளையும் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் தனது ஆடுகளை பார்க்க வந்துள்ளார். வந்தவருக்கு பெரும் அதிர்ச்சி ஆட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 49 செம்மறி ஆடுகளும் தீயில் கருகி செத்துக் கிடந்தன. இத்தனை நாட்கள் பார்த்து பக்குவமாக வளர்த்த ஆடுகள் இப்படி ஆனதை எண்ணி குமார் சோகத்தில் மூழ்கினார்.
பின்னர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அருகில் உள்ள இடத்தில் விவசாய கழிவுகளை எரித்த நிலையில் தீ பரவி இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story