தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் தினந்தோறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருச்சி,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"தமிழ்நாட்டில் தினந்தோறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, மது பழக்க வழக்கம், பாலியல் வன்கொடுமைகள் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விடை இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
மாநில அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு அடிப்படை காரணம் மது பழக்க வழக்கம் தான். தமிழ்நாடு அரசு குற்ற சம்பவங்களை தடுக்க எந்த கவனத்தையும் செலுத்தவில்லை. தமிழ்நாடு முன்னாள் மாநில பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு பா.ஜ.க. மேலிடம் விரைவில் புதிய பதவி கொடுக்கும்."
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






