தொடர் கனமழை: வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது - நிர்வாகம் அறிவிப்பு


தொடர் கனமழை: வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது - நிர்வாகம் அறிவிப்பு
x

கோப்புப்படம்

தொடர் கனமழை காரணமாக வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட கனமழை முன்னறிவிப்பைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையார்களுக்கு 16.10.2024 அன்று திறக்கப்படாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story