'காங்கிரஸ் அம்பேத்கரை ஒரு தலைவராக பார்க்கவில்லை' - தமிழிசை சவுந்தரராஜன்


காங்கிரஸ் அம்பேத்கரை ஒரு தலைவராக பார்க்கவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்
x

காங்கிரஸ் அம்பேத்கரை ஒரு தலைவராக பார்க்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை,

சென்னை வேளச்சேரியில் தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"டாக்டர் அம்பேத்கரை எல்லா விதத்திலும் விட்டுக்கொடுக்க அம்பேத்கர் தயாராக இருக்கிறார் என்பது வேதனையாக இருக்கிறது. காங்கிரஸ் அரசியல் ரீதியாக அம்பேத்கரை எதிர்த்தது என்று திருமாவளவன் சொல்கிறார். 1952 மற்றும் 1954-ல் காங்கிரஸ் அம்பேத்கரை ஒரு வேட்பாளராக மட்டும்தான் பார்க்க வேண்டுமா? அவரைப் போன்றவர்கள் வெற்றி பெறட்டும் என்று காங்கிரஸ் ஏன் முடிவு செய்யவில்லை?

காங்கிரஸ் அம்பேத்கரை ஒரு வேட்பாளராகத்தான் பார்த்திருக்கிறது, தலைவராக பார்க்கவில்லை. அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று கூட அவர்கள் நினைக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நேரு மற்றும் அம்பேத்கரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வெளியானபோது மத்திய அரசை அம்பேத்கர் எதிர்த்திருக்கிறார். ஆனால் வாக்கு வங்கிக்காக திருமாவளவன் எல்லாவற்றையும் விட்டுக்கொடுப்பார் என்று நினைக்கவில்லை. 'இந்தியா' கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் சுயநலவாதிகள் என்பதை அவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்."

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story