சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானவர்களுக்கு வாழ்த்துகள் - ஜி.கே.வாசன்

கோப்புப்படம்
2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானவர்கள் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானவர்கள் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள். மத்திய அரசின் சாகித்ய அகாடமி நிறுவனம் இந்திய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி வருவது சிறப்புக்குரியது.
ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதுகளையும், குழந்தைகளுக்கான இலக்கியப் பங்களிப்புகளுக்காக வழங்கப்படும் பால சாகித்ய புரஸ்கார் விருதுகளையும் சாகித்ய அகாடமி வழங்கி வருவது பெருமைக்குரியது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர் லட்சுமிஹர்க்கும், பால சாகித்ய புரஸ்கார் விருது சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
'கூத்தொன்று கூடிற்று' என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் லட்சுமிஹர் அவர்களுக்கு யுவ புரஸ்கார் விருதுடன் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. அதே போல தமிழில் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற புதினத்திற்காக பால சாகித்ய புரஸ்கார் விருதுடன் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது.
இந்தியாவின் 24 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் எழுதப்பட்ட சிறந்த படைப்புகளுக்காகவும், இளம் மற்றும் குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ் மொழியில் சிறுகதை தொகுப்பிற்காக அறிவுர்கூர்மையுடன், கடின உழைப்புடன் செயல்பட்ட லட்சுமிஹர் அவர்கள் போற்றுதலுக்குரியவர். அதே போல தமிழ் மொழியில் சிறார் நாவலுக்காக அறிவுக்கூர்மையுடன், கடின உழைப்புடன் செயல்பட்ட விஷ்ணுபுரம் சரவணன் அவர்களும் போற்றுதலுக்குரியவர்.
சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த லட்சுமிஹர் அவர்களையும், திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரத்தைச் சேர்ந்த சரவணன் அவர்களையும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
லட்சுமிஹர் மற்றும் விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோர் தொடர்ந்து தாங்கள் சார்ந்த துறையில் சிறந்து விளங்கி பல்வேறு விருதுகளைப் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






