கார் ஓட்டும் பயிற்சியின்போது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை


கார் ஓட்டும் பயிற்சியின்போது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
x

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.

சென்னை,

சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள கார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் கார் ஓட்டும் பயிற்சிக்கு சென்று வந்தார். அவருக்கு திருவேற்காட்டை சேர்ந்த செல்வம் என்ற சித்திரை செல்வம் (வயது 37) என்பவர் கார் ஓட்டுவதற்கு பயிற்சி கொடுத்து வந்தார்.

கார் ஓட்ட பயிற்சி அளிக்கும்போது செல்வம், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் மகளிர் போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.


Next Story