கோவை: 17 வயது சிறுமி கர்ப்பம் - கணவர் மீது போக்சோ வழக்கு


கோவை: 17 வயது சிறுமி கர்ப்பம் - கணவர் மீது போக்சோ வழக்கு
x

சிறுமியின் கணவரான வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை,

கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து இருக்கிறாள். மருத்துவ பரிசோதனைக்காக அவளை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவளுக்கு 17 வயதே ஆவது டாக்டர்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் உடனடியாக கோவை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நேரில் சென்று விசாரித்த குழந்தைகள் நல அதிகாரிகள் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியின் கணவரான வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story