ஓட்டலில் இறைச்சி உணவில் கரப்பான் பூச்சி; வாடிக்கையாளர் அதிர்ச்சி


ஓட்டலில் இறைச்சி உணவில் கரப்பான் பூச்சி; வாடிக்கையாளர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 23 April 2025 9:11 AM IST (Updated: 23 April 2025 11:26 AM IST)
t-max-icont-min-icon

சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட அந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோடு பகுதியில் ஒரு ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு மார்த்தாண்டம் அருகே உள்ள கண்ணக்கோட்டையை சேர்ந்த ஒருவர் நேற்று காலை சாப்பிடச் சென்றார். அங்கு அவர் பீப் இறைச்சி உணவை வாங்கி சாப்பிட தொடங்கினார்.

அப்போது அதில் கரப்பான் பூச்சி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், அதை ஓட்டல் நிர்வாகத்திடம் காட்டி கூறினார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. பின்னர் அவர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் ஓட்டலில் சோதனை நடத்தினர். அப்போது ஓட்டல் சமையல் அறை மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. மேலும், காலாவதியான உணவு பொருட்கள் இந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட அந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். மேலும், ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

1 More update

Next Story