ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: மீட்புப்பணிகள் தீவிரம்


ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: மீட்புப்பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 23 Dec 2024 8:08 PM (Updated: 23 Dec 2024 8:18 PM)
t-max-icont-min-icon

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்பூட்லி நகர் அருகே சரூந்த் கிராமம் உள்ளது. அங்குள்ள விவசாய நிலத்திற்கு அருகே சுமார் 150 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று பாசனத்திற்காக தோண்டப்பட்டது. தொடர்ந்து நீர் ஊராதநிலையிலும் மூடப்படாமல் திறந்து கிடந்துள்ளது.

இந்தநிலையில் அங்கு விளையாடி கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போராடி வருகிறார்கள்.

1 More update

Next Story