அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர்


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர்
x
தினத்தந்தி 1 March 2025 10:03 AM IST (Updated: 1 March 2025 10:44 AM IST)
t-max-icont-min-icon

இன்று தனது 72-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

சென்னை

இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிலையில் மாணவர் சேர்க்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று முதல் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கி உள்ளன.


1 More update

Next Story