சென்னை: மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய இளைஞர் - குவியும் பாராட்டு


சென்னை: மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய இளைஞர் - குவியும் பாராட்டு
x

தண்ணீரில் கால் வைத்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது.

சென்னை

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராபர். இவரது மகன் (வயது 9) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு கல்வி பயின்று வருகிறான். இதனிடையே, சிறுவன் கடந்த 16ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தான்.

அப்போது வரும் வழியில் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் தேங்கி இருந்த மழைநீரில் நடந்து சென்றுள்ளான். அந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால், தண்ணீரில் கால் வைத்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து அவன் தண்ணீரில் விழுந்து துடிதுடித்தான்.

அப்போது, அந்த வழியாக பைக்கில் வைத்த கண்ணன் என்ற இளைஞர், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மின்சாரம் தாக்கி தண்ணீரில் உயிருக்கு போராடிய சிறுவனின் கையை பிடித்து வெளியே இழுத்தார். பின்னர், அருகில் இருந்த சிமெண்ட் தரையில் சிறுவனை வைத்து அவருக்கு முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனின் உயிரை காப்பாற்றிய இளைஞர் கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

1 More update

Next Story