சென்னை-திருச்சி விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு; பயணிகள் அவதி


சென்னை-திருச்சி விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு;  பயணிகள் அவதி
x

representative image (File)

தினத்தந்தி 6 Aug 2025 8:02 PM IST (Updated: 6 Aug 2025 8:04 PM IST)
t-max-icont-min-icon

ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார்

சென்னை,

சென்னையில் இருந்து திருச்சிக்கு 68 பயணிகள், 5 பணியாளர்கள் உள்பட 73 பேரை ஏற்றிக்கொண்டு இன்று காலை 5.45 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாரானது. ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார்.

உடனடியாக விமானத்தை நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விமான என்ஜினீயர்கள் தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பழுதுபார்ப்பு ஒரு மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டது, மேலும் விமானம் காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சமீபகாலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு பிரச்சினை ஏற்பட்டு வருவது, பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story