சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து


சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து
x

மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671) திருச்சி - மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருச்சியில் நிறுத்தப்படும்.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி-திண்டுக்கல் வழித்தட பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671) திருச்சி - மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருச்சியில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும். மதுரையில் இருந்து வரும் நாளை (சனிக்கிழமை) மற்றும் 17 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672), அதற்கு மாற்றாக மதுரையில் இருந்து மதியம் 3.30 மணிக்கு (30 நிமிடம் தாமதம்) புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story