சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு


சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு
x
தினத்தந்தி 12 Jan 2025 7:56 AM IST (Updated: 12 Jan 2025 7:58 AM IST)
t-max-icont-min-icon

10 சதவீதம் தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை,

பபாசி நடத்தும் 48-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கடந்த டிசம்பர் 27-ந்தேதி தொடங்கியது. இங்கு சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 சதவீதம் தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

புத்தகக் காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த புத்தகக் காட்சி நடைபெறுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு என பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை புத்தகக் காட்சி இன்று நிறைவு பெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு நிறைவு நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நிதிபதி மகாதேவன் பங்கேற்கிறார்.


Next Story