17-ம் தேதி புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக வரும் 17-ம் தேதி புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் அதிகப்படியான பயணிகள் பயணித்து வருகின்றனர். அன்றாட பணி மற்றும் பல்வேறு பணிகளுக்காக சென்னை வருபவர்களுக்கு குறைந்த செலவில், விரைவாக செல்ல இந்த வசதி பெரிதும் பயன்படுகிறது.
இந்த நிலையில், பராமரிப்பு பணி காரணமாக வரும் 17-ம் தேதி புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே, வரும் 17-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கடற்கரை - பல்லாவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சி, திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரெயில் கள் அட்டவணைப்படி இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.