அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியை இறுதி செய்வோம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னை,
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தமிழக பிரச்சினைகளுக்காக மனு கொடுத்தேன். கூட்டணி குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்து அவரது சொந்த கருத்து. அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியை இறுதி செய்வோம். தேர்தல் கூட்டணி விஷயத்தில் எந்த கட்சியும் நிலையாக இருந்ததில்லை. திமுகவை வீழ்த்துவது மட்டுமே அதிமுகவின் ஒரே இலக்கு. அதிமுகவின் ஒரே நோக்கம் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதிமுக கூட்டணி அமைக்கும்போது ஊடகத்திற்கு வெளிப்படையாக தெரிவிப்போம் என்றார்.
Related Tags :
Next Story