திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை தொடர்பான வழக்குகள் ஒத்திவைப்பு


திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை தொடர்பான வழக்குகள் ஒத்திவைப்பு
x

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக வழக்கு தொடர்ந்த அனைத்து தரப்பினரும் பதில் மனுவை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா மலை தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க கோரி மதுரையைச் சேர்ந்த கண்ணன் உள்ளிடோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், திருப்பரங்குன்றம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. கோவிலின் தென் பகுதியில் உமையாண்டார் குகை கோவில் உள்ளது. மேலும் 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இந்த நிலையில் இந்த கோவிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ள நிலையில் கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில் ஆடு மற்றும் கோழிகளை பலியிடுவதாக தெரிவிக்கப்பட்டது. இது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவித்து திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும்

இதே போல திருப்பரங்குன்றம் மலையை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என குறிப்பிடப்பட்டிருந்ததும் வருத்தமளித்தது. எனவே சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடைவிதித்து திருப்பரங்குன்ற மழையை சமணர் குன்று மலை என அறிவிக்கக்கூடிய மனுவும், இதேபோல சிக்கந்தர் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற மனுவும் சிக்கந்தர் பாதுஷா தர்கா புதுப்பிக்கும் பணிக்கு காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொல்லியல் துறை தரப்பில் ஆஜரான வக்கீல், திருப்பரங்குன்றம் மலையின் பரப்புகளை அளவிடுவது தொடர்பாக ஆட்சியரிடம் அனுமதி கோரிய நிலையில், அனுமதி இன்னமும் வழங்கப்படாமல் உள்ளது என வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதிகள், அனைத்து தரப்பினரும் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அன்றைய தினம் ட்ரோன் மூலம் அளவீடு செய்வதற்கு அனுமதி வழங்குவது குறித்தும் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்து வழக்கு விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story