கல்வராயன் மலைப்பகுதி மக்கள் தொடர்பான வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


கல்வராயன் மலைப்பகுதி மக்கள் தொடர்பான வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

கல்வராயன் மலைப்பகுதி மக்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டதில் விஷ சாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்குள்ள கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனிடையே கல்வராயன் மலைப் பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பான விசாரணியின்போது, கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை-சின்ன திருப்பதி சாலையை 3 வாரங்களில் சீரமைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் தரப்பில், வெள்ளிமலை-சின்ன திருப்பதி இடையே, அரசு அனுமதியளித்த 12 மாதங்களில் சாலை அமைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சாலை அமைப்பதற்கான அனுமதியை பெற்று, அறிக்கையில் கூறிய காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 More update

Next Story