சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

மூன்று வாரங்களில் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மூன்று வாரங்களில் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுவதுடன், அவை மீண்டும் முளைக்காமல் கண்காணிக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ள கிராமங்கள் நேரில் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், ஒவ்வொரு மாதமும் சில கிராமங்களை சீமை கருவேல மரங்கள் அற்ற கிராமங்களாக அறிவிக்க வேண்டும் என்று தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story