தேனி அருகே கார்-வேன் மோதி விபத்து - 3 பேர் பலி


தேனி அருகே கார்-வேன் மோதி விபத்து - 3 பேர் பலி
x
தினத்தந்தி 28 Dec 2024 3:24 PM IST (Updated: 28 Dec 2024 3:26 PM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்த 3 பேரும் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி என்னுமிடத்தில் சுற்றுலா வேன் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 4 பேரில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சுற்றுலா வேனில் பயணம் செய்த 18 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்களை அந்த வழியாகச் சென்றவர்கள் மற்றும் போலீசார் மீட்டு வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில், கார் அப்பளம் போல நொறுங்கியது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த 3 பேரும் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story