விபத்தில் சிக்கிய கார்.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராசு படுகாயம்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுக் கொண்டிருந்தபோது கெண்டையன்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது.
முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன் சென்ற கார், மீன் வியாபாரி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த முன்னாள் எம்எல்ஏ ராசு, கார் ஓட்டுநர் ரமணி மற்றும் மீன் வியாபரி படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Related Tags :
Next Story






