காலை உணவு திட்டம்: தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பு ரத்து - மேயர் பிரியா அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்த திட்டத்தின் கீழ் 356 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை,
1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழக அரசால் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்த திட்டத்தின் கீழ் 356 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கோரும் அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே அந்த ஒப்பந்த அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்வதாகவும், மாநகராட்சியே இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story