பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைஅடுத்து உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் தொழில்நுட்ப கருவியுடன் தவெக தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






