தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்- காங்கிரஸ் அறிவிப்பு


தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்- காங்கிரஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 July 2025 3:00 PM IST (Updated: 26 July 2025 3:03 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்- காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக அவர் செல்லும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும். தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை மறுத்து உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருவதை கண்டித்து இந்த கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும்.

திருச்சி சிவா எம்.பி. காமராஜர் பற்றி அந்தக் கருத்தை தெரிவித்திருக்கக் கூடாது. அதற்காக உண்மையிலேயே நாங்கள் வருத்தப்பட்டோம். அதே நேரத்தில் எங்களது கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டிய விதத்தில் தெரிவித்துவிட்டோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதைத் தாண்டி திருச்சி சிவா தெரிவித்த கருத்துக்கு எதிராக நாங்கள் தடியெடுத்தா போராட்டம் நடத்த முடியும்? இதைத்தான் பலரும் விரும்புகிறார்கள்."

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story