தூத்துக்குடியில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் கைது


தூத்துக்குடியில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் கைது
x

தமிழகத்தில் பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்தார். அவர் தமிழக மக்களுக்கும் தமிழகத்துக்கும் செய்த துரோகங்களை கண்டித்து, அவர் தமிழகத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் புதிய விமான நிலையம் திறந்து வைக்க வருகை தந்த பிரதமர் மோடியை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி கையில் ஏந்தி ஊர்வலமாக பிரதமர் மோடியே திரும்பி போ என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவர் சிவி சண்முகம், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, ஐசன்சில்வா, ராஜன், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் மாரிகுமார், மாநகர் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜான்சாமிவேல், மாநகர் மீனவர் அணி மாவட்ட தலைவர் மிக்கேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கிரஸ் எடிசன், ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் முத்துமணி, இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மரிய ஆல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story