சமூக நீதியை பாஜக அரசு பின்பற்றவில்லை: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சமூக நீதியை பாஜக அரசு பின்பற்றவில்லை: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 3 Dec 2024 8:28 PM IST (Updated: 3 Dec 2024 8:34 PM IST)
t-max-icont-min-icon

பாஜக சமூக நீதிக்கு எதிரானது. 10 ஆண்டு கால ஆட்சியில் இட ஒதுகீடு முறை பின்பற்றப்படவில்லை என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெறும் சமூக நீதி மாநாட்டில் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை பாஜக அரசு விரும்பவில்லை. சமூக ரீதியாக, கல்வி ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களை கைதூக்கி விடுவதே சமூக நீதி. மகளிர் முன்னேற்றத்தையும் மத்திய பாஜக அரசு விரும்பவில்லை. ஒன்றிய அரசில் காலியாக உள்ள ஓபிசி, எஸ்சி பணியிடங்களை நிரப்ப வேண்டும் .

பாஜக சமூக நீதிக்கு எதிரானது. 10 ஆண்டு கால ஆட்சியில் இட ஒதுகீடு முறை பின்பற்றப்படவில்லை. மத்திய அரசில் காலியாக உள்ள ஒபிசி, எஸ்சி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சமூக ரீதியாக , கல்வி ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களை தூக்கி விடுவதே சமூக நீதி" என்று கூறியுள்ளார்.


Next Story