சேலம்: பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அடியோடு சாய்ந்த வாழை மரங்கள் - விவசாயிகள் வேதனை


சேலம்: பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அடியோடு சாய்ந்த வாழை மரங்கள் - விவசாயிகள் வேதனை
x

ஏக்கருக்கு தலா சுமார் 4 முதல் 8 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம்

சேலம் மாவட்டம் எடப்பாடி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், எடாப்பாடி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கனமழை, பலத்த காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்ததால் ஏக்கருக்கு தலா சுமார் 4 முதல் 8 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story