சொத்துவரி, தொழில்வரி செலுத்துவோர் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சென்னை மாநகராட்சி


சொத்துவரி, தொழில்வரி செலுத்துவோர் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சென்னை மாநகராட்சி
x

சொத்துவரி, தொழில்வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை


பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சொத்துவரி, தொழில்வரி மற்றும் நிறுமவரி செலுத்துவதற்காகவும், தொழில் உரிமம் புதுப்பிப்பதற்காகவும் மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய விடுமுறை நாட்களில் வருவாய்த்துறை இயங்கும்.

நடப்பு நிதியாண்டு 31.03.2025 அன்று முடிவடைவதன் காரணமாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில்வரி மற்றும் நிறுமவரி செலுத்துவதற்காகவும், தொழில் உரிமம் புதுப்பிப்பதற்காகவும், பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை வரும் 29.03.2025, 30.03.2025 மற்றும் 31.03.2025 ஆகிய விடுமுறை நாட்களிலும் இயங்கும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story