கணவருடன் தகராறு; 2 குழந்தைகளை சாலையில் விட்டு சென்ற தாய் - பத்திரமாக மீட்ட போலீஸ்
சாலையில் சுற்றித் திரிந்த 2 குழந்தைகளை போலீசார் பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள டீக்கடை அருகே 2 குழந்தைகள் நீண்ட நேரமாக தனியாக சுற்றி திரிந்துள்ளன. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டதில், அக்குழந்தைகள் ஏரியூர் பகுதியை சேர்ந்த ராகவஸ்ரீ மற்றும் முகேஷ் என்பது தெரியவந்தது.
அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் அக்குழந்தைகளை தாய் நந்தினி தனியே விட்டு சென்றது தெரியவந்த நிலையில், உறவினர்களை வரவழைத்து போலீசார் 2 குழந்தைகளையும் பத்திரமாக ஒப்படைத்தனர். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நந்தினி குழந்தைகளை விட்டு சென்றதாக உறவினர்கள் தெரிவித்ததையடுத்து, அப்பெண்ணுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story