தைலாபுரம் தோட்ட சுவரில் ஒட்டப்பட்டு இருந்த அன்புமணி போஸ்டர்கள் அகற்றம்

அன்புமணிக்கு பாமக தலைவர் பதவி தரமாட்டேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க டாக்டர் ராமதாஸ் கட்சியில் சரியாக செயல்படாதவர்களையும், டாக்டர் அன்புமணி ராமதாசின் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார். மேலும், தனது மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு பாமக தலைவர் பதவி தரமாட்டேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் தோட்ட சுவரில் அன்புமணி ராமதாசின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அன்புமணி ராமதாசை பாராட்டி அவரது ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. போஸ்டர்களை அகற்றியது யார்? என்ற விவரம் தெரியவில்லை. இதனால் அங்கு பரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
Related Tags :
Next Story






