அமித்ஷாவை நாளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்?


அமித்ஷாவை நாளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்?
x

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்றுள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வருகிறது. நிர்வாகிகளை ஒருவர் நியமிப்பதும் மற்றொருவர் நீக்குவதுமாக அதிரடிகள் தொடர்கிறது.

இந்த பரபரப்பான சூழலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று டெல்லி சென்றுள்ளார். நாளை (திங்கட்கிழமை) தேர்தல் ஆணைய அதிகாரிகளை, அன்புமணி சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கைகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்திக்க அன்புமணி ராமதாஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story