தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக நீடிக்கிறது: டி.டி.வி. தினகரன்


தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக நீடிக்கிறது: டி.டி.வி. தினகரன்
x
தினத்தந்தி 12 April 2025 12:49 PM IST (Updated: 12 April 2025 12:52 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக, பாஜக இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது

சென்னை ,

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து விட்டன.அதன்படி, அதிமுக, பாஜக இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது.

இந்த நிலையில் , தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக நீடிக்கிறது என அக்கட்சி பொதுச்ச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது ,

தேசிய ஜனநாயக கூட்டணி என்பது பெரிய கடல் போன்றது . தாங்கள் மோடி அணியில் இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக தொடர்ந்து நீடிக்கிறது. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வாய்ப்பு இல்லை. அதில் அங்கு சிலருக்கு பரந்த மனது இல்லை.

தி.மு.க ஆட்சி தொடரக்கூடாது என்று நினைக்கக்கூடிய ஒத்த கருத்துள்ள கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும். தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படுகிறோம். தி.மு.க-வை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார் .

1 More update

Next Story