குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்


குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்
x

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 1-ந்தேதி ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், குற்றாலம் அருவிகளும் இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

குற்றாலத்தில் தற்போது நீர்வரத்து சீராக வந்துகொண்டிருக்கும் நிலையில், அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் உற்சாகமாக குளித்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story