வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார்: எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 7-ந் தேதி பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா, திருமாவளவன் ஆகியோர் தேசிய விரோதிகள். அவர்கள் 2 பேரையும் கண்காணிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விமான நிலைய போலீசார் எச்.ராஜா மீது கலவரத்தை தூண்டுதல், வன்முறையை தூண்ட முயற்சித்தல், பொய்யான தகவல் பரப்புதல், இருதரப்பினர் இடையே பகைமையை வளர்த்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story