நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதல்-அமைச்சர் என்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு

7வது முறையாக திமுகவே ஆட்சியமைக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;
"எனது தலைமையினான திமுக அரசு பதவியேற்று நாளை 5ம் ஆண்டு தொடங்குகிறது. 7வது முறையாக திமுகவே ஆட்சியமைக்கும். இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சி, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஆட்சி, ஒன்றிய அரசுக்கே வழிகாட்டும் ஆட்சி திமுக ஆட்சிதான்.
நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் |அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்.. நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கின்றனர். அரசியலுக்கு அரிச்சுவடே தெரியாதவர்கள் எல்லாம் அடுத்த முதலமைச்சர்.. என்று பேசக்கூடிய நிலைதான் உள்ளது. நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை."
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story






