அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் காலமானார்


அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் காலமானார்
x

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 76.

1972-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தவர் கருப்பசாமி பாண்டியன். 1977-ல் ஆலங்குளம் தொகுதி, 1980-ல் பாளையங்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக கருப்பசாமி பாண்டியன் தேர்வானார்.

ஜெயலலிதாவோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். இதையடுத்து 2006 தேர்தலில் தி.மு.க. சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து 2015-ல் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின், 2016-ல் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அதன் பின்னர் 2018-ல் மீண்டும் தி.மு.க.விற்கு வந்த கருப்பசாமி பாண்டியன், 2020-ல் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

இந்நிலையில், அண்மையில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story